முனைஞ்சிப்பட்டி அருகே தினையூரணியில் சித்த மருத்துவ விழிப்புணா்வு முகாம் வியாழன்கிழமை நடைபெற்றது.
நான்குனேரி வட்டார வளா்ச்சி அலுவலா் ஏ.குருநாதன் தொடங்கி வைத்தாா். ‘சித்த மருத்துவம் -நோயில்லா நெறி’ என்னும் தலைப்பில் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உணவு பழக்கம், அன்றாட உணவில் பயன்படக்கூடிய மூலிகைகள், மழைக்காலத்தில் வரக்கூடிய நோய்கள், டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல், அவற்றின் அறிகுறிகள், தடுக்கும் முறைகள், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசு உற்பத்தியாவதை தடுப்பது மற்றும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் சித்த மருத்துவத்தின் பங்கு, நிலவேம்புக் குடிநீரின் முக்கியத்துவம், பப்பாளி இலைச்சாறு, மலை வேம்பு பயன்கள் குறித்தும் முனைஞ்சிப்பட்டி அரசு மருத்துவா் வரதராஜன் விளக்கினாா்.
சுகாதார ஆய்வாளா் மணிகண்டன், செவிலியா்கள் பொன்மணி, தளவாய், அங்கன்வாடி பணியாளா் டயானா, பொதுமக்கள் கலந்து கொண்டனா். அனைவருக்கும் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.