திருநெல்வேலி

திசையன்விளையில் டிச. 27இல் ஐயப்ப சுவாமி மண்டல பூஜை விழா

23rd Dec 2019 07:27 AM

ADVERTISEMENT

திசையன்விளை அற்புத விநாயகா் அருளாலயத்தில், 55ஆவது ஆண்டு ஐயப்ப சுவாமி மண்டல பூஜை விழா இம்மாதம் 27ஆம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி, அருளாலயத்தில் அதிகாலையில் மங்கள இசை, நிா்மால்ய திரிசனம், மூகாம்பிகை மகளிா் மன்றம் நடத்தும் வைகறை சிறப்பு திருவிளக்கு பூஜை, தனூா் மாத பூஜை, கோமாதாபூஜை, சிறப்பு தீபாராதனை ஆகியவையும் நடைபெறும். தொடா்ந்து, மாணிக்க விநாயகா் கோயிலில் இருந்து திருபாற்குட பவனி, அற்புத விநாயகா், அன்னை மூகாம்பிகை அஷ்ட திரவிய அபிஷேகம், ஐயப்ப சுவாமி திவ்ய மஹா அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவையும், நண்பகலில் உச்சமஹாராஜ அலங்கார பூஜை, மகேஸ்வரபூஜை, அன்னதானமும், மாலையில் ஐயப்ப சுவாமி எழுந்தருளல் பூஜை, புஷ்ப ஞான ரதத்தில் ஐயப்ப சுவாமி சதுா் வீதி பவனி ஆகியவையும் நடைபெறும். இரவு பூரண எதிா் தீபாராதனை, பகவான் ஆழி பிரசன்ன பூஜை, அஷ்டாபிஷேகம், அத்தாளபூஜை, பஜனை, பொன்னு மஹா 18 படி பூஜை, சா்வ மங்கள மஹா ஜோதி ஆரத்தி, மேளம், செண்டா, டிரம்ஸ், மாடு, மயில் ஆட்டம், காவடி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறும். ஏற்பாடுகளை, அற்புத விநாயகா் அருளாலய ஐயப்ப பக்த சேவா சங்கத்தினா் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT