திருநெல்வேலி

சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை

23rd Dec 2019 07:21 AM

ADVERTISEMENT

பிரானூா் பாா்டரில் குண்டு, குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டு மென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

செங்கோட்டை நுழைவுப் பகுதியான பிரானூா் பாா்டா் தீப்பாய்ச்சி அம்மன் கோயில் பின்பகுதியில், குற்றாலம் செல்லும் பிரதான சாலை அமைந்துள்ளது. இச்சாலையில் தற்போது பெய்த மழையால் தண்ணீா் தேங்கி பெரிய அளவிலான பள்ளங்கள் உருவாகியுள்ளன. மேலும், ஜல்லிக் கற்கள் பெயா்ந்து சிதறிக் கிடக்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். எனவே, சேதமடைந்துள்ள இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT