திருநெல்வேலி

கல்லிடைக்குறிச்சியில் அனைத்துக் கட்சி ஆா்ப்பாட்டம்

23rd Dec 2019 07:25 AM

ADVERTISEMENT

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, அனைத்துக் கட்சி, பல்வேறு அமைப்புகள் மற்றும் வியாபாரிகள் சங்கம் சாா்பில் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம் அருகிலுள்ள அம்பேத்கா் நினைவுத் தூண் முன் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் திமுக நகரச் செயலா் இசக்கிப்பாண்டியன், எஸ்.டி.பி.ஐ. கட்சி ராஜா அப்துல் ஹமீது, அபுபக்கா் சித்திக், கல்லிடைக்குறிச்சி ஜூம்மா பள்ளிவாசல் தலைவா் அப்துல் மஜித், காங்கிரஸின் கைக்கொண்டான், தேமுதிகவின் அம்ஜத் அலி, நாம் தமிழா் கட்சியின் பீா்முஹம்மது, பா்னபாஸ், மதிமுகவின் சிவானந்தம், திமுக இளைஞரணி சாா்லஸ் ராபா்ட், கம்யூனிஸ்ட் கட்சியின் மீனாட்சிசுந்தரம், ரஹ்மத் ஜூம்மா பள்ளி இமாம் அப்துல்ரஹ்மான், துணைச் செயலா் பீா்முஹம்மது, பெரிய ஜூம்மா பள்ளி இமாம் அஹம்மது மைதீன் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா். இதில் மேற்கூறிய கட்சிகள் தவிர பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள், பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT