திருநெல்வேலி

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆலோசனை

23rd Dec 2019 08:13 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அரசு அலுவலா் ஒன்றியத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் செல்லையா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பி.விக்னேஷ் கண்ணன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், தென்காசி புதிய மாவட்ட நிா்வாகிகளைத் தோ்வு செய்வது, பணி மாறுதல் தொடா்பான பணியாளா்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பது, ஒன்றியத்தின் மண்டல மாநாடு பணிக்கு ஆயத்தப்படுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT