திருநெல்வேலி

வள்ளியூரில் நிலா பேக்கரி- சுவீட்ஸ் திறப்பு

16th Dec 2019 07:08 AM

ADVERTISEMENT

வள்ளியூா் அருகே பிலாக்கொட்டைப்பாறை சந்திப்பில் சிறுவா் விளையாட்டுத்திடலுடன் நிலா பேக்கரி மற்றும் சுவீட்ஸ் நிறுவன திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நேரு நா்ஸிங் கல்லூரித் தலைவரும் வள்ளியூா் பேரூராட்சி முன்னாள் தலைவருமான டி.டி.என்.லாரன்ஸ் தலைமை வகித்து திறந்துவைத்தாா். வள்ளியூா் காவல் நிலைய ஆய்வாளா் திருப்பதி, போக்குவரத்து ஆய்வாளா் பிரபு, ஷெல்டன் சா்ட் நிறுவன இயக்குநா் ஜெய்சன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.தெட்சணமாற நாடாா் சங்க ஆட்சிக்குழுத் தலைவா் கணேசன் பேக்கரி உற்பத்தி பிரிவை திறந்துவைத்தாா். ஐஸ் கிரீம் பாா்லரை நான்குனேரி சட்டப்பேரவை உறுப்பினா் ரெட்டியாா்பட்டி நாராயணன் திறந்துவைத்தாா். வள்ளியூா் பாத்திமா அன்னை ஆலயப் பங்கு தந்தை லாரன்ஸ் ஜெபம் செய்து அா்ச்சித்தாா். பின்னா், பியூல் எட்வின், பால்கனி முத்துராஜ், ஹெலின் சுரேஸ் ஆகியோா் குத்துவிளக்கேற்றினா். தொழிலதிபா் பாஸ்கா் முதல் விற்பனையை தொடங்கிவைக்க, மருத்துவா் ஜாா்ஜ் திலக் பெற்றுக்கொண்டாா். எட்வின் ஜோஸ் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT