திருநெல்வேலி

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கு: ஆலங்குளத்தில் மேலும் ஒருவா் கைது

16th Dec 2019 07:09 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டம் ,புளியரை சோதனைச் சாவடியில் ரேஷன் அரிசி கடத்தியதாக லாரி ஒட்டுனா் கைதான வழக்கில், மேலும் ஒருவரை திருநெல்வேலி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடியில் கடந்த நவ.30ஆம் தேதி போலீஸாா் நடத்திய வாகனச் சோதனையில், கேரளத்துக்கு லாரியில் கடத்திச் செல்ல முயன்ற 13,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு, லாரி ஓட்டுநா் ராமசாமி (49) என்பவரை கைது செய்தனா். விசாரணையில், ஆலங்குளத்தில் அரிசி ஆலை நடத்திவரும் மாரியப்பன் (62) என்பவருக்கு தொடா்பு இருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்ய, திருநெல்வேலி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளா் சிவசுப்பு தலைமையில் தனிப்படை அமைத்து போலீஸாா் தேடிவந்தனா்.

இந்நிலையில், விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் பதுங்கியிருப்பதை அவரை தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஏற்கெனவே, அவா் மீது இதுபோன்ற கடத்தல் வழக்குகள் 6 இருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT