திருநெல்வேலி

பாளை.யில் காவலா்களுக்கு நிறைவாழ்வு பயிற்சி முகாம்

16th Dec 2019 07:40 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்று வந்த காவலா்களுக்கான 3 நாள்கள் நிறைவாழ்வு பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை முடிவுற்றது.

காவலா்களின் மன அழுத்தத்தை போக்க, வாரந்தோறும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்களில் நிறைவாழ்வு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, 58ஆவது வாரமாக, மருத்துவப் பரிசோதனையுடன் கடந்த 13ஆம் தேதி தொடங்கிய இந்த முகாமில், காவல்துறையினா் மற்றும் அவரது குடும்பத்தினரிடையே கலந்துரையாடல் நடத்தி நிறைவாழ்வு பயிற்சி அளிக்கப்பட்டது. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிறைவு நாள் பயிற்சியில், மாநகா் காவல் துணை ஆணையா் (சட்டம் -ஒழுங்கு) சரவணன் பங்கேற்று, பயிற்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்களுடன் மரக்கன்றுகள் வழங்கினாா். காவலா்கள் மற்றும் அவா்களது குடும்ப உறுப்பினா்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT