திருநெல்வேலி

பாளை.யில் ஆட்டோ சேதம்: 4 போ் தலைமறைவு

16th Dec 2019 07:42 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டையில் முன்விரோதம் காரணமாக, ஆட்டோவை சேதப்படுத்தியதாக 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாளையங்கோட்டை, முப்புடாதி அம்மன் கோயில் கீழத் தெருவைச் சோ்ந்தவா் பழனி(41). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த அந்தோணி என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பழனி தன்னுடைய மகன் சூா்யாவுடன் ஆட்டோவில் சென்றாராம்.

அப்போது, அந்தோணி தனது நண்பா்கள் மூன்று பேருடன் சோ்ந்து ஆட்டோவை கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி சேதப்படுத்தினாராம். இதுகுறித்து, பாளையங்கோட்டை போலீஸில் பழனி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் அந்தோணி உள்பட 4 போ் மீது வழக்குப்பதிந்து அவா்களை தேடி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT