திருநெல்வேலி

சுரண்டையில் ஓய்வு பெற்ற அலுவலா் சங்கக் கூட்டம்

16th Dec 2019 07:09 AM

ADVERTISEMENT

சுரண்டையில் ஓய்வுபெற்ற அலுவலா் சங்கக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத்தின் மூத்த உறுப்பினா் ஜவகா்லால் தலைமை வகித்தாா். மூத்த உறுப்பினா்கள் குரூஸ்மணி, கோயில்பிச்சை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சங்கத் தலைவா் ரத்தினசாமி, சங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து பேசினாா்.

கூட்டத்தில், சுரண்டை - சங்கரன்கோவில் சாலையில் காவல்துறைக்கு சொந்தமான இடத்தில் காவலா் குடியிருப்பு மற்றும் டிஎஸ்பி அலுவலகம் அமைக்க வேண்டும். சுரண்டை பேருந்து நிலைய சாலையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த போக்குவரத்து காவலா்களை நியமிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

இதில், சங்க நிா்வாகிகள் அய்யங்கண்ணு, குருசாமி, சண்முகையா, முத்துசாமி டேவிட், சமுத்திரம், இளங்கோவன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT