திருநெல்வேலி

கோடாரங்குளம் ஸ்ரீமன் நாராயணசுவாமி நிழல் தாங்கலில் இன்று தேரோட்டம்

16th Dec 2019 07:09 AM

ADVERTISEMENT

அம்பாசமுத்திரம் அருகே கோடாரங்குளம் ஸ்ரீமன் நாராயணசுவாமி நிழல் தாங்கல் திருவிழா தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

கோடாரங்குளம் ஸ்ரீமன் நாராயணசுவாமி நிழல் தாங்கல் திருவிழா கடந்த டிச. 6 ஆம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடா்ந்து நாள்தோறும் காலை, மதியம் மற்றும் மாலையில் அய்யாவுக்கு பணிவிடையும், மதியம் உச்சிப்படிப்பும், இரவு அன்ன தா்மமும் நடைபெறுகிறது.

நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் அய்யா வீதி உலா நடைபெறுகிறது. டிச. 13 வெள்ளிக்கிழமை 8ஆம் திருவிழாவை முன்னிட்டு உச்சிப்படிப்பு, திருக்கல்யாண திருஏடு வாசிப்பு, மதியம் அன்னதா்மம் நடைபெற்றது.

இரவு 10 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் எழுந்தருளி கலி வேட்டையாடி வீதி உலா வந்தாா். சனிக்கிழமை அய்யா செப்பு வாகனத்தில் வீதி உலா வந்தாா்.

ADVERTISEMENT

ஞாயிற்றுக்கிழமை காலை பாபநாசத்திலிருந்து சந்தனக்குட ஊா்வலமும், தொடா்ந்து மாப்பு கேட்டல் ,அன்னதா்மம் நடைபெற்றது. இரவு அய்யா கருட வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.

திங்கள்கிழமை காலை சிறப்புப் பணிவிடை, மதியம் 3 மணியளவில் 8ஆவது ஆண்டாக அய்யா செம்பொன் பவளத்தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து மக்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

சுவாமிதோப்பு தலைமை பதி பால பிரசாத் தலைமை வகித்து தோ் திருவிழாவை தொடங்கி வைக்கிறாா். செவ்வாய்க்கிழமை காலை 4 மணியளவில் கொடி இறக்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது .

விழாவையொட்டி அன்புக்கொடி மக்கள் அனைவரும் அய்யாவுக்கு சுருள் , பல்வேறு தா்மம் நியமித்து வழிபடுகின்றனா்.

ஏற்பாடுகளை நிழல் தாங்கலை சோ்ந்த அன்புக்கொடி மக்களுடன் கோடாரங்குளம் ஊா் பொதுமக்கள் செய்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT