திருநெல்வேலி

கூடங்குளம் 2ஆவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்

16th Dec 2019 07:08 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2ஆவது அணுஉலையில் பராமரிப்புப் பணிக்காக மின் உற்பத்தி ஞாயிற்றுக்கிழமை நிறுத்தப்பட்டது.

கூடங்குளத்தில் ரஷ்யநாட்டு தொழில்நுட்பத்துடன் ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அணுஉலைகள் அமைக்கப்பட்டு மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2ஆவது அணுஉலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு, பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணிகள் நிறைவடைந்ததும், மீண்டும் மின்உற்பத்தி தொடங்கப்படும்; முதலாவது அணுஉலையில் வழக்கம் போல் மின்உற்பத்தி நடைபெற்று வருகிறது; தற்போது, 900 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது என என அணுமின் நிலைய வட்டாரத்தில் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT