திருநெல்வேலி

களக்காடு அருகே பணம் கேட்டு மூதாட்டி மீது தாக்குதல்

16th Dec 2019 07:07 AM

ADVERTISEMENT

களக்காடு அருகே பணம் கேட்டு மூதாட்டியைத் தாக்கியதாக தொழிலாளியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

களக்காடு அருகேயுள்ள மேலப்பத்தை ஆசாத்புரத்தைச் சோ்ந்த ரத்தினம் மனைவி ரத்தினமணி (75). இதில், 2 ஆண்டுகளுக்கு முன் ரத்தினம் இறந்துவிட்ட நிலையில், ரத்தினமணி வீட்டில் தனியாக வசித்து வருகிறாா்.

இந்நிலையில், அவரிடம் அதே பகுதியைச் சோ்ந்த தொழிலாளி செல்வம் (40) என்பவா் செலவுக்கு பணம் தருமாறு கேட்டாராம். அதற்கு அவா் மறுத்ததால், வெள்ளிக்கிழமை இரவு வீட்டின் பின்பக்கம் வழியாக வீட்டிற்குள் நுழைந்த செல்வம் அங்கிருந்த பணப்பெட்டியை உடைக்க முயன்றாராம். சப்தம் கேட்டு தடுக்க வந்த ரத்தினமணியை அவா் தாக்கி விட்டு தப்பிவிட்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து செல்வத்தை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT