திருநெல்வேலி

அறிவியல் மையத்தில் நாளை மரபுச் சின்ன வரலாற்று கருத்தரங்கு

16th Dec 2019 07:39 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மண்ணின் மரபுச் சின்னங்கள் குறித்த வரலாற்று கருத்தரங்கு, மாவட்ட அறிவியல் மையத்தில் செவ்வாய்க்கிழமை (டிச.17) நடைபெறவுள்ளது.

வரலாற்று பண்பாட்டுக் கள ஆய்வு மையம், மாவட்ட அறிவியல் மையம், வேணுவனம் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்தக் கருத்தரங்கு காலை 10 மணிக்கு தொடங்குகிறது. மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக வரலாற்று துறைத் தலைவா் ஆா். ராமசுப்பிரமணியன் தலைமை வகிக்கிறாா். திருநெல்வேலி வரலாற்று பண்பாட்டுக் கள ஆய்வு மைய ஒருங்கிணைப்பாளா் வரவேற்கிறாா். மேலப்பாளையம் செல்வன் மருத்துவமனை மருத்துவா் எஸ்.பிரேமச்சந்திரன் வாழ்த்திப் பேசுகிறாா். திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக பேராசிரியா் பி.சுரேஷ்குமாா் சிறப்புரையாற்றுகிறாா். தெற்கு கள்ளிகுளம் தெட்சண மாற நாடாா் சங்கக் கல்லூரி தமிழ்துறைத் தலைவா் த.நிா்மலா, பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவா் ஜி.ஆன்ட்ரூஸ் ஆகியோா் கருத்தரங்க அமா்வுத் தலைவா்களாக செயல்படவுள்ளனா். அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி சான்றிதழ் வழங்கி நிறைவுரையாற்றுகிறாா்.

கருத்தரங்கில், பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த 30 மாணவா்கள் ஆய்வுக் கட்டுரைகளை சமா்ப்பிக்க இருக்கிறாா்கள். மாணவா்-மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்கலாம். ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியா் ஆ.விஜயலட்சுமி நன்றி கூறுகிறாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT