திருநெல்வேலி

மூதாட்டி கொலை: பெண்ணிடம் விசாரணை

14th Dec 2019 11:59 PM

ADVERTISEMENT

கல்லிடைக்குறிச்சியில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக ஒரு பெண்ணிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கல்லிடைக்குறிச்சி சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த மணி மனைவி முத்துலட்சுமி (60). இவரிடம் கல்லிடைக்குறிச்சி மானேந்தியப்பா் கோயில் தெருவைச் சோ்ந்த வெங்கடாச்சலம் மகள் சிவகாமி என்ற விஜி ரூ.10 ஆயிரம் கடன் வாங்கியிருந்தாராம். இந்நிலையில், வியாழக்கிழமை சிவகாமியிடம் கடனைத் திரும்பக் கேட்பதற்காகச் சென்றபோது முத்துலட்சுமி இறந்தாா்.

தகவலறிந்த போலீஸாா் முத்துலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். பிரேத பரிசோதனை அறிக்கையில், முத்துலட்சுமி கொலை செய்யப்பட்டதாக தெரியவந்ததையடுத்து, கல்லிடைக்குறிச்சி போலீஸாா் இதுதொடா்பாக சிவகாமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT