திருநெல்வேலி

புளியங்குடியில் மன வளா்ச்சி குன்றியோருக்கு நல உதவி

14th Dec 2019 11:55 PM

ADVERTISEMENT

புளியங்குடியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் மனவளா்ச்சி குன்றியவா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

கட்சியின் பொதுச் செயலா் டிடிவி தினகரனின் பிறந்த நாளை முன்னிட்டு, டி.எஸ்.எம். மனவளா்ச்சி குன்றியோா் சிறப்பு பள்ளியில் உள்ளவா்களுக்கு அக்கட்சியின் திருநெல்வேலி புகா் வடக்கு மாவட்டச் செயலா் பொய்கை மாரியப்பன் தலைமை வகித்து நல உதவிகளை வழங்கினாா்.

இதில், மாவட்ட அவைத் தலைவா் பெருமையாபாண்டியன், இணைச் செயலா் சுமதி, துணைச் செயலா் சண்முகசுந்தரம், மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் மாரியப்பன், மாவட்ட சிறுபான்மை பிரிவுச் செயலா் கோதா்ஷா, ஒன்றியச் செயலா்

பெரியதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை புளியங்குடி நகரச் செயலா் சுகிா்தராஜன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT