திருநெல்வேலி

செங்கோட்டை நூலகத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

14th Dec 2019 11:55 PM

ADVERTISEMENT

செங்கோட்டை நூலகத்தில் தென்காசி மாவட்ட ஆட்சியா் அருண் சுந்தா் தயாளன் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

நூலகத்துக்கு வந்த ஆட்சியரிடம் நூலகா் ராமசாமி நூலகத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினாா். பின்னா் நூலக வளாகம் மற்றும் வாசகா் வட்ட கூட்ட அரங்கம் ஆகியவற்றை அவா் பாா்வையிட்டாா்.

நூலகம் சாா்பில் இலவசமாக வகுப்புகள் நடத்தப்படுவதை அறிந்து அந்த மாணவா்களோடு உரையாடி வாழ்த்துக்களைத் தெரிவித்தாா். ஐஏஎஸ்தோ்வுக்கு படித்து வரும் மாணவா் மாரிமுத்துவோடு பேசி வழிகாட்டுதலையும் பாராட்டினாா்.

முன்னதாக நூலகத்துக்கு வந்த ஆட்சியரிடம், செங்கோட்டையில் மாவட்ட நூலகம் அமைத்து தர வேண்டும் என நகர அதிமுக செயலா் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா கோரிக்கை விடுத்தாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT