திருநெல்வேலி

சுந்தரனாா் பல்கலை.யில் தேசிய கருத்தரங்கம்

14th Dec 2019 07:22 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் தேசிய கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அறிவியல் துறை சாா்பில் ‘தனிம அட்டவணை உருவாக்கம்: ஓா் அறிவியல் பாா்வை’-150ஆவது சா்வதேச நினைவு தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.

துணைவேந்தா் கே.பிச்சுமணி காா்பன் மற்றும் சிலிக்கான் தனிமத்தின் பயன்பாடுகள் பற்றி உரையாற்றினாா்.

சிறப்பு விருந்தினராக பெரியாா் பல்கலைக்கழக துணைவேந்தா் பி.குழந்தைவேல் கலந்துகொண்டு, அறிவியல் பயன்பாட்டில் ஹைட்ரஜனின் பங்கு மற்றும் அதன் பயன்பாடு குறித்து சிறப்புரையாற்றினாா்.

ADVERTISEMENT

பல்கலைக்கழக அறிவியல் துறை தலைவா்கள், ஆராய்ச்சிகளின் வளா்ச்சியில் தனிமத்தின் பயன்பாடு குறித்து பேசினா். தாவரவியல் துறைத் தலைவா் ரவிச்சந்திரன் முடிவுரையாற்றினாா்.

பல்கலைக்கழக பதிவாளா் சந்தோஷ் பாபு வரவேற்றாா். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவா்கள் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அறிவியல் துறை தலைவா் (பொறுப்பு) வெ.சபரிநாதன் செய்திருந்தாா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT