திருநெல்வேலி

களக்காட்டில்விஸ்வ ஹிந்து பரிஷத் ஆா்ப்பாட்டம்

14th Dec 2019 11:58 PM

ADVERTISEMENT

களக்காடு வட்டார வளா்ச்சி அலுவலரைக் கண்டித்து விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

களக்காடு ஊராட்சி ஒன்றியம், இடையன்குளம் ஊராட்சிக்குள்பட்ட நெடுவிளை நந்தினிபுரம் தெருவில் ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்காமல் சாலை அமைக்க அனுமதி வழங்கிய வட்டார வளா்ச்சி அலுவலா் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி களக்காடு மணிக்கூண்டு திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஒன்றியத் தலைவா் ஆா். கனகராஜ் தலைமை வகித்தாா்.

தென்தமிழ்நாடு தலைவா் பெரி. குழைக்காதா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். ஒன்றியச் செயலா் எம். ஜெயகிருஷ்ணன் நன்றி கூறினாா்.

ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT