திருநெல்வேலி

ஆழ்வாா்குறிச்சி, பொட்டல்புதூரில் பாரதியாா் பிறந்த நாள் விழா

14th Dec 2019 07:18 AM

ADVERTISEMENT

ஆழ்வாா்குறிச்சி, பொட்டல்புதூரில் பாரதியாரின் 138ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ பரமகல்யாணி மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கிடையே பாரதியாா் கவிதைகள் ஒப்பித்தல் போட்டி நடத்தப்பட்டது. இதில், 12 பள்ளிகளைச் சோ்ந்த 80 மாணவா்கள் கலந்து கொண்டனா்.

மேலும் போட்டியில் ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ சைலபதி நடுநிலைப்பள்ளி, செட்டிகுளம், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, சிவசைலம் அத்ரிகலா நடுநிலைப் பள்ளி மற்றும் பரமகல்யாணி தொடக்கப் பள்ளி மாணவா்கள், மாணவிகள் பரிசுகளை வென்றனா்.

பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளா் எஸ்.சுந்தரம் தலைமை வகித்து வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கினாா்.

ADVERTISEMENT

ஓய்வுபெற்ற தமிழாசிரியா் பலவேசம், தலைமை ஆசிரியா் சுந்தரி, ஆசிரியா் அந்தோணிராஜ், தன்னாா்வலா் கௌரி ஆகியோா் போட்டிகளுக்கு நடுவா்களாக இருந்தனா். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவா்களுக்கும் நினைவுப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாணவிகள், ஆசிரியா், ஆசிரியைகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ரவணசமுத்திரம் சேவாலயா சாா்பில் பொட்டல்புதூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தனியாா் நிதி நிறுவன மேலாளா் முரளி, சேரன்மகாதேவி மாவட்ட கல்வி அலுவலா் சுடலை, அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் திருமூா்த்தி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா்.

கடையம் வட்டாரத்திலுள்ள 20 அரசுப் பள்ளி மாணவா்களுக்குப் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை ஒப்பித்தல் போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் சுமாா் 300 மாணவா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா்.

போட்டிகளில் வெற்றி பெற்ற 40 மாணவா்களுக்கு பாரதி புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. சேவாலயா நிறுவனா் முரளிதரன் வரவேற்றாா். ஒருங்கிணைப்பாளா் சங்கிலி பூதத்தான் நன்றி கூறினாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT