திருநெல்வேலி

வள்ளியூரில் காங்கிரஸ் கொடியேற்றம்

11th Dec 2019 09:38 AM

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சித் தலைவா் சோனியா காந்தியின் பிறந்த நாள் விழா வள்ளியூரில் கொண்டாடப்பட்டது.

வள்ளியூா் நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, நகரத் தலைவா் சீராக் இசக்கியப்பன் தலைமை வகித்தாா். நீதிமன்றம் அருகே காங்கிரஸ் கொடியேற்றப்பட்டு, மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. விழாவில், மாநில பொதுக்குழு உறுப்பினா் வெங்கடேஷ் தன்ராஜ், வட்டாரத் தலைவா் சுயம்புலிங்கதுரை, மாவட்ட என்.ஜி.ஓ. தலைவா் கதிரவன் ரோச், முத்துசாமி, ஆறுமுகம் ஆசிரியா், வி.இ.சசி, குமாரசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT