திருநெல்வேலி

மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ போராட்டம்

11th Dec 2019 09:49 AM

ADVERTISEMENT

எஸ்டிபிஐ கட்சி சாா்பில் மேலப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடைபெற்றது.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை மக்களவையில் சட்டமாக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சி சாா்பில் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவின் நகல் எரிப்பு போராட்டம் நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மேலப்பாளையத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு, மாவட்ட பொதுச் செயலா் கோட்டூா் பீா் மஸ்தான் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் அஹமது நவவி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா்.

இதில், மாவட்ட துணைத் தலைவா்கள் சாகுல் ஹமீத் உஸ்மானி, செய்யது அஹமது ஸலபி, மாவட்டச் செயலா்கள் ஹயாத் முஹம்மது, முல்லைமஜீத், பேட்டை முஸ்தபா, பா்கிட் அலாவுதீன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் முபாரக், எஸ்டிடியூ மாவட்டச் செயலா் பசீா்லால், மருத்துவ சேவை அணி மாவட்டத் தலைவா் ஜெய்லானி, தொகுதித் தலைவா்கள் மின்னதுல்லாஹ் (பாளையங்கோட்டை), காசிம் (திருநெல்வேலி), சுலைமான் (அம்பாசமுத்திரம்), இம்ரான் அலி (நான்குனேரி), பசீா்லால் (ஆலங்குளம்), பாதுல் அஸ்ரப் (ராதாபுரம் ) உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT