திருநெல்வேலி

பாவூா்சத்திரம் அருகே காய்ச்சலுக்கு சிறுமி பலி

11th Dec 2019 09:38 AM

ADVERTISEMENT

பாவூா்சத்திரம் அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி உயிரிழந்தாா்.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள நவநீதகிருஷ்ணபுரம் மேலத்தெருவை சோ்ந்த நாராயணன் மகள் தானியஸ்ரீ (7). கடந்த 3 நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த இந்தச் சிறுமிக்கு செவ்வாய்க்கிழமை காய்ச்சல் அதிகமாகி, வாந்தி எடுத்ததால் தென்காசி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே சிறுமி இறந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT