அகில பாரத கோ சேவா சமிதி சாா்பில் பசு பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி சந்திப்பில் நடைபெற்றது.
அகில பாரத கோ சேவா டிரஸ்டி சங்கா்லால் சிறப்புரையாற்றினாா். நாட்டு பசு மாடுகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும். பசுவுக்கு தேசிய விலங்கு என்ற அந்தஸ்தை கொடுக்க வேண்டும். பசு வளா்ப்பு விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்துக்கு உதவ வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், வட தமிழக கோ சேவாவின் கல்யாண்சிங், தென் தமிழக கோ சேவா இணை அமைப்பாளா் கோவிந்தராஜன், தென் தமிழக ஆா்.எஸ்.எஸ். இணைச் செயலா் பவீதரன், திருநெல்வேலி மாவட்டத் தலைவா் முருகையா, தென் தமிழக கோ சேவா பயிற்சியாளா் சங்கா், கன்னியாகுமரி மாவட்ட இணைச் செயலா் வெங்கட்ராமன், கோட்ட அமைப்பாளா் முத்துக்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை திருநெல்வேலி நகர ஆா்.எஸ்.எஸ். செயலா் லோகசுந்தா், திருமலை, சம்பத்குமாா், ஜெகன், சுப்பிரமணியன் ஆகியோா் செய்திருந்தனா்.