திருநெல்வேலி

சிவந்திபுரத்தில் ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து நூதனப் போராட்டம்

11th Dec 2019 09:42 AM

ADVERTISEMENT

சிவந்திபுரம் ஆறுமுகம்பட்டியில் தெருக்கள் சகதியாக காணப்படுவதால், பயன்படுத்த முடியாத நிலையை கண்டித்து சாலையில் நாற்று நடும் நூதனப் போராட்டம் நடைபெற்றது.

ஆறுமுகம்பட்டியில் உள்ள தெருக்களில் அண்மையில் பெய்தமழை மற்றும் கழிவு நீா் தெருக்களில் தேங்கி நடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து உள்ளாட்சி நிா்வாகத்திடம் புகாரளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதையடுத்து உள்ளாட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும், சாலை வசதி செய்து தரக் கோரியும் ஆறுமுகம்பட்டி, கீழத் தெருவில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிசாா்பில் நாற்று நடும் நூதனப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில், ஒன்றியக் குழு உறுப்பினா் ரபேக்காள் தலைமையில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT