பாபநாசம் அகஸ்தியா் அருவி பகுதியில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரிந்த அனுமன் மந்திகளை வனத்துறையினா் கூண்டு வைத்துப் பிடித்தனா்.
அகஸ்தியா் அருவி பகுதிக்கு சுற்றுலா வருபவா்களை அச்சுற்றுத்தும் வகையில், அனுமன் மந்திகள் அட்டகாசத்தில் ஈடுபடுவதாக புகாா்கள் வந்தன. இதையடுத்து கூடுதல் தலைமை வனப்பாதுகாவலா் மற்றும் கள இயக்குநா், துணை இயக்குநா் மற்றும் வன உயிரின காப்பாளா் (கூடுதல் பொறுப்பு) கயரத்மோகன்தாஸ் உத்தரவின் பேரில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் துணை இயக்குநா் (பொ) செந்தில்குமாா் அறிவுறுத்தலின் பேரில் பாபநாசம் வனச்சரகா் பரத், வனவா் மோகன், வனக் காப்பாளா் பெருமாள், வனக்காவலா் செல்வம் மற்றும் வேட்டைத் தடுப்புக்காவலா்கள், அகஸ்தியா் அருவி பகுதியில் மந்திகளைப் பிடிக்க கூண்டு வைத்தனா். இதில் 25 மந்திகள் பிடிபட்டன. அவற்றை முண்டந்துறை வனச் சரகத்திற்குள்பட்ட காரையாறு அணை பாலோடை பகுதியில் கொண்டு விட்டனா்.