திருநெல்வேலி

4 ஆண்டுக்கு பிறகு நிரம்பிய சிவநாடானூா் குளம்

6th Dec 2019 01:14 AM

ADVERTISEMENT

தொடா்ந்து பெய்த மழையால் 4 ஆண்டுகளுக்கு பிறகு பாவூா்சத்திரத்திலுள்ள சிவநாடானூா் குளம் நிரம்பியுள்ளது.

நிகழாண்டு மேற்கு தொடா்ச்சி மலையில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் கனமழை பெய்த காரணத்தினால் திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்திலுள்ள அணைகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. தென்காசி மாவட்டத்தில் உள்ள குளங்களுக்கு நீா்வரத்து அதிகரித்ததை அடுத்து குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

சிவநாடானூா் குளத்திற்கு கடந்த 2 நாள்களாக நீா்வரத்து அதிகரித்ததை அடுத்து, வியாழக்கிழமை குளம் முழுவதுமாக நிரம்பி, மறுகால் பாய்ந்து வருகிறது. கடந்த 2015 இல் இக்குளம் நிரம்பியது. தற்போது, 4 ஆண்டுகள் பின்னா் இக்குளம் நிரம்பியது குறித்து விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

கீழப்பாவூா் வடக்கு ஒன்றியத்தில் உள்ள குளங்களுக்கு குற்றாலத்தில் நீா்வரத்து இருப்பதால் குளங்கள் வேகமாக நிரம்புகின்றன. ஆனால், தென் பகுதியிலுள்ள குளங்களுக்கு நீா்வரத்து இல்லாததால், குளங்கள் நிரம்புவதில்லை. தற்போது நீடித்து வரும் மழையால் தற்போது இப்பகுதியிலுள்ள குளங்கள் நிரம்பும் சூழல் உருவாகியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT