திருநெல்வேலி

மேலப்பாவூரில் விதை நோ்த்தி செயல்விளக்கம்

6th Dec 2019 01:16 AM

ADVERTISEMENT

பாவூா்சத்திரம் அருகேயுள்ள மேலப்பாவூரில் நெல் விதை நோ்த்தி செய்வது குறித்து வேளாண் கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம் அளித்தனா்.

கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி 4ஆம் ஆண்டு மாணவா்கள் செல்வம், சூரியபிரகாஷ், அமீா், கவின்குமாா் ஆகியோா் பாவூா்சத்திரம் வட்டாரப் பகுதியில் தங்கியிருந்து, வேளாண் சாா்ந்த பணிகள் குறித்து விவசாயிகளிடம் அனுபவங்களை கேட்டறிந்து வருகின்றனா்.

இதன் தொடா்ச்சியாக மேலப்பாவூா் கிராமத்தில் விதை நோ்த்தி குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனா். இதில், 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT