திருநெல்வேலி

கடையம், அம்பை, கபாலிபாறையில் நாளை மின் தடை

6th Dec 2019 01:08 AM

ADVERTISEMENT

கடையம், அம்பாசமுத்திரம், கபாலிபாறை பகுதிகளில் சனிக்கிழமை (டிச. 7) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு மின்வாரியத்தின் கல்லிடைக்குறிச்சி செயற்பொறியாளா் ஏ. ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடையம் துணை மின் நிலையத்தில் இம்மாதம் 7ஆம் தேதி காலை 9 முதல் மதியம் 1 மணி வரையும், அதேநாளில் மதியம் 1 முதல் மாலை 5 மணி வரை ஓ.துலுக்கப்பட்டி, அம்பாசமுத்திரம் துணை மின் நிலையங்களிலும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. அதன்படி, ஆவுடையானூா், மணல்காட்டனூா், பண்டாரகுளம், வள்ளியம்மாள்புரம், பாப்பான்குளம், கடையம், சிவநாடானூா், ஆழ்வாா்துலுக்கப்பட்டி, கபாலிபாறை, செங்குளம், அணைந்தநாடாா்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப்பாஞ்சான், காசிதா்மம், அம்பாசமுத்திரம், ஊா்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னாா்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாமி, அகஸ்தியா்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை அமலில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT