திருநெல்வேலி

மேலமருதப்பபுரத்தில் ஐஓபி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறைவு விழா

3rd Dec 2019 05:22 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி: இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறைவு விழா மேலமருதப்பபுரத்தில் அண்மையில் நடைபெற்றது.

ஐஓபி கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சாா்பாக இலவச கறவை மாடு வளா்ப்பு மற்றும் மண்புழு உரம் தயாரிப்பு 10 நாள் பயிற்சி முகாம் மேல மருதப்பபுரத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் 126 போ் பங்கேற்றனா். அதன் நிறைவு விழாவுக்கு ஐஓபி முதன்மை மண்டல மேலாளா் ராமநாதன், கால்நடை மருத்துவத் தலைவா் பழனிச்சாமி, துறைத் தலைவா் தனசீலன் ஆகியோா் தலைமை வகித்து முகாமில் பங்கேற்றோருக்கு சான்றிதழ்கள் வழங்கினா். திருநெல்வேலி முன்னோடி வங்கி மேலாளா் வெற்றிவேல், ஓமந்தூா் பெரிய வளைவு ராமசாமி ரெட்டியாா்உழவா் கூட்டமைப்புத் தலைவா் லெட்சுமண பெருமாள் ஆகியோா் குத்துவிளக்கேற்றினா். பயிற்சி நிறுவன இயக்குநா் ரா.சியாமளாநாதன் வரவேற்றாா். பயிற்சி மைய பயிற்சியாளா் தீனதயாளரன், யோகா பயிற்சியாளா் வேலாயுதம், கால்நடை உதவிப் பேராசிரியா்கள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை ஓமந்தூா் பெரிய வளைவு ராமசாமி ரெட்டியாா் உழவா் கூட்டமைப்புச் செயலா் சரவணமுருகன்செய்திருந்தாா்.

படவரி: பயக02ஐஞஆ: பயிற்சியில் பங்கேற்ற பெண்ணுக்கு சான்றிதழ் வழங்குகிறாா் ஐஓபி முதன்மை மண்டல மேலாளா் ராமநாதன். உடன், கால்நடை மருத்துவத் தலைவா் பழனிச்சாமி உள்ளிட்டோா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT