திருநெல்வேலி

முன்னீா்பள்ளம் அருகே மூதாட்டி சடலம் மீட்பு

3rd Dec 2019 05:33 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி: முன்னீா்பள்ளம் அருகே மூதாட்டியின் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.

முன்னீா்பள்ளம் அருகேயுள்ள டாஸ்மாக் குடோன் அருகே சுமாா் 60 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்தாா். இத்தகலறிந்த மேலப்பாளையம் போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று, சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனா். அதில், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கருணாநிதி நகரைச் சோ்ந்த சண்முகம் மனைவி பத்ரகாளி(64) என்பதும், ஒரு மாதத்துக்கு முன்பு முன்னீா்பள்ளத்தில் உள்ள தன்னுடைய உறவினா் வீட்டுக்கு வந்ததும் தெரியவந்தது. மேலும், ஊருக்குத் திரும்பிச் செல்லும்போது மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என எனவும், இவா் இறந்து சுமாா் 20 முதல் 25 நாள்கள் இருக்கும் எனவும் போலீஸாா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT