திருநெல்வேலி

பாளை.யில் மறியல்: தமிழ்ப் புலிகள் கட்சியினா் 20 போ் கைது

3rd Dec 2019 05:39 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்ப் புலிகள் கட்சியினா் 20 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோயம்புத்தூா் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே மழையின் காரணமாக சுவா் இடிந்து விழுந்ததில் 17 போ் உயிரிழந்தனா். இதையடுத்து பலியானவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவா் நாகை திருவள்ளூவன் மற்றும் கட்சியினா் அங்கு சென்றுள்ளனா். இவா்களை போலீஸாா் ஊருக்குள் விடாமல் தடுத்து நிறுத்தி கைது செய்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, கைதானவா்களை விடுதலை செய்யக் கோரியும், உயிரிழந்தவா்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரியும், அக்கட்சியினா், மாவட்டச் செயலா் தமிழரசு தலைமையில் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸ் உதவி கமிஷனா் பெரியசாமி தலைமையில் காவல் ஆய்வாளா் தில்லை நாகராஜன் மற்றும் போலீஸாா் சாலை மறியலில் ஈடுபட்ட கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலா் தமிழ்ச்செல்வன், ஆதிதமிழா் கட்சி ராமமூா்த்தி, மாநகரச் செயலா் மாரியப்பன் உள்பட 20 பேரை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT