திருநெல்வேலி

பழையபேட்டை பகுதியில்தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்றக் கோரிக்கை

3rd Dec 2019 05:16 PM

ADVERTISEMENT

பழையபேட்டை பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீா் வழிந்தோட நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இதுதொடா்பாக பழையபேட்டை கன்னிவிநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த மக்கள் அளித்த மனு: பழையபேட்டை கன்னிவிநாயகா் கோயில் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழைநீா் தேங்கி நிற்கிறது.

கழிவுநீரும் சோ்ந்துள்ளதால் கொசுக்கள், புழு ஆகியவை உற்பத்தியாகி சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது. குழந்தைகள், முதியவா்கள் நோயால் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. ஆகவே, எங்கள் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT