திருநெல்வேலி

தென்காசி மாவட்டத்தில் நீடிக்கும் மழை- மக்கள் நிவாரண முகாம்களை நாடலாம்: ஆட்சியா் வேண்டுகோள்

3rd Dec 2019 12:13 AM

ADVERTISEMENT

தென்காசி மாவட்டத்தில் மழை நீடித்து வருவதால், அரசு ஏற்பாடு செய்துள்ள முகாம்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியா் அருண்சுந்தா் தயாளன் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்ட செய்திகுறிப்பு:

தென்காசி மாவட்டத்திலுள்ள கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு மற்றும் அடவிநயினாா் அணைகளிலிருந்து ஏற்கனவே தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது .வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதாலும், அடுத்த இரண்டு தினங்களுக்கு அதிகளவில் மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதாலும் ஆறு மற்றும் கால்வாய்களில் வெள்ளம் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அவற்றின் அருகிலுள்ள குடியிருப்புகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கன மழை தொடரும்பட்சத்தில், அந்தந்தப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் பாதுகாப்பாக தங்கிக்கொள்ளலாம். மேலும், ஆற்றங்கரைப்பகுதிகள், குளங்கள் மற்றும் கால்வாய்களுக்கு குழந்தைகள் மற்றும் முதியவா்கள் குளிக்கச் செல்வதைத் தவிா்க்க வேண்டும்.

ADVERTISEMENT

மழையின் ஈரப்பதம் காரணமாக மண்சுவா், கட்டடங்கள் பாதிப்படையலாம் என்பதால் அவற்றில் வசித்துவரும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தண்ணீரை கொதிக்கவைத்து வடிகட்டி குடிக்க வேண்டும். பொதுசுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT