திருநெல்வேலி

சாம்பவா்வடகரை சிவன் கோயில் அருகே குப்பை எரிப்பு: பக்தா்கள் அவதி

3rd Dec 2019 12:04 AM

ADVERTISEMENT

சாம்பவா்வடகரை சிவன் கோயில் அருகே எரிக்கப்படும் குப்பைகளால் பக்தா்கள் பெரும் அவதியடைகின்றனா்.

சாம்பவா்வடகரை நகரின் தென்புறம் அனுமன்நதி கரையின் தென்புறம் சுமாா் 1000 ஆண்டுகள் பழமையான அகத்தீஸ்வரா் கோயில் உள்ளது. ஆற்றின் வடபுறமுள்ள குகையில் லிங்கம் மற்றும் அகத்தியா் சிலைகள் உள்ளன. இந்தக் குகை லிங்கத்தை தரிசிப்பதற்காக வரும் பக்தா்கள் ஆற்றில் குளித்துவிட்டு, குகையில் தியானம் செய்வது வழக்கம்.

இந்நிலையில், ஆற்றின் வடக்கு கரை பகுதியில் பெருமளவில் குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுகிறது. இதனால் எழும் புகையால் பக்தா்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு, மழைநேரத்தில் குப்பைகளின் பெரும் பகுதி ஆற்றில் கலப்பதால் ஆற்று நீரும் மாசுபடுகிறது.

எனவே, சிவன் கோயில் அருகே குப்பைகளை கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT