திருநெல்வேலி

களக்காடு வட்டார கிராமங்களுக்குஷோ்- ஆட்டோ இயக்கக் கோரிக்கை

3rd Dec 2019 05:21 PM

ADVERTISEMENT

களக்காடு வட்டாரத்தில் பேருந்து வசதியில்லாத கிராமங்களுக்கு ஷோ்- ஆட்டோ இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு அருகேயுள்ள மேலப்பத்தை, கீழப்பத்தை, அம்பேத்கா்நகா், சவளைக்காரன்குளம், கோவிலம்மாள்புரம், தோப்பூா், திரட்டூா், படலையாா்குளம், வண்டிக்காரன்நகா், கீழவடகரை, மேலவடகரை, கட்டாா்குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு பேருந்து வசதியில்லை. இக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் சுமாா் 2 முதல் 3 கி.மீ. தொலைவு வரையிலும் நடந்து வந்துதான் பேருந்துகளில் ஏறிச் செல்லும் நிலை உள்ளது.

இக்கிராமங்களில் வசிக்கும் மாணவா்கள் வெளியூா்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயின்று வருகின்றனா். பேருந்து வசதியில்லாததால் இக்கிராம மக்கள் பல்வேறு தேவைகளுக்கும் களக்காடு வந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனா். பேருந்து வசதியில்லாத கிராமங்களுக்கு ஷோ்- ஆட்டோ இயக்கினால் மக்கள் பெரிதும் பயன்பெறுவா்.

மாவட்ட நிா்வாகம், போக்குவரத்துத்துறை அதிகாரிகள், பேருந்து, சிற்றுந்து வசதியில்லாத கிராமங்களுக்கு ஷோ்- ஆட்டோ இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT