திருநெல்வேலி

முறையாக உதவித்தொகை கோரி தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

30th Aug 2019 10:21 AM

ADVERTISEMENT

முறையாக உதவித்தொகை வழங்கக் கோரி, திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் முன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் பட்டியலின மாணவர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 2017 முதல் 2019 வரையிலான கல்வியாண்டில் உதவித்தொகை முறையாக வழங்கப்படவில்லையாம்.
இதைக் கண்டித்து தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாணவரணி நிர்வாகிகள் தலைமையில்,  திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் முன் மாணவர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் அவர்கள் அளித்த மனு: கல்லூரிகளில் அரசாணை 92-ன் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை முறையாக வழங்கப்படவில்லை. இதனால், ஏழை, எளிய மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, உடனடியாக கல்வி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT