பரப்பாடி அண்ணாநகர் முத்தாரம்மன் கோயில் கொடை விழா 4 நாள்கள் நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் கும்பாபிஷேகம், சிறப்பு பூஜைகள், வில்லிசை, திருவிளக்கு பூஜை, முளைப்பாரி எடுத்தல், மஞ்சள் பெட்டி ஊர்வலம், சுவாமி மஞ்சள் நீராடல், சுவாமி வீதி உலா, வெற்றி சுந்தர விநாயகருக்கு 108 தேங்காய் உடைத்தல், அலங்கார பூஜை, பல்சுவை நிகழ்ச்சிகள், சாமக்கொடை, பொங்கல் பானை வைத்தல், அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.