திருநெல்வேலி

நான்குனேரியில் பிணையில் வந்தவர் விஷம் குடித்து தற்கொலை

30th Aug 2019 07:47 AM

ADVERTISEMENT

நான்குனேரியில் பிணையில் வெளியே வந்தவரை போலீஸார் மற்றொரு வழக்கில் கைது செய்ய முயன்றதால் வியாழக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
நான்குனேரியைச் சேர்ந்தவர் முருகன் மகன் மாடசாமி (39). இவர், மீது மணல் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மணல் கடத்தல் வழக்கில் மாடசாமி தற்போது பிணையில் வெளியே வந்தாராம். இந்த நிலையில் மற்றொரு வழக்கில் மாடசாமியை கைது செய்ய  நான்குனேரி போலீஸார் அவரது வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது.  இதில், மனமுடைந்த மாடசாமி, வீட்டில் வைத்திருந்த விஷத்தை குடித்து மயங்கி கிடந்தாராம். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். மாடசாமிக்கு மனைவி இந்திரா, 2 மகன்கள் உள்ளனர்.  போலீஸாரின் நடவடிக்கையால் தனது கணவர் மாடசாமி  விஷம் குடித்து இறந்ததாக இந்திரா, நான்குனேரி டி.எஸ்.பி. யிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT