வள்ளியூர் வட்டார தடகளப் போட்டியில் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஓட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.
பள்ளிகளுக்கிடையிலான இப்போட்டிகள் வடக்கன்குளம் தெரசா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதில், மாணவர்கள் பிரிவில் 28 தங்கம், 28 வெள்ளி, 10 வெண்கலப் பதக்கங்களை இப்பள்ளி பெற்றது. மாணவிகள் பிரிவில் 31 தங்கம், 29 வெள்ளி, 11 வெண்கலப்பதக்கங்கள் பெற்று 253 புள்ளிகள் எடுத்து ஓட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது.
மாணவர்கள், அளித்த உடற்கல்வி ஆசிரியர்களை பள்ளியின் தலைவர் கிரகாம்பெல், தாளாளர் திவாகரன், முதல்வர் ஆறுமுகக்குமார், ஆசிரியர்கள் பாராட்டினர்.