திருநெல்வேலி

செங்கோட்டை வாணியர் சங்கம்: கல்வி நிதி அளிப்பு

30th Aug 2019 07:46 AM

ADVERTISEMENT

செங்கோட்டை  நகர வாணியர் சங்கம் சார்பில் 21ஆம் ஆண்டு கல்வி நிதி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு, வாணியர் சமுதாய கல்வி நிதித் தலைவர் குமரேசன் தலைமை வகித்தார்.  வாணியர் சமுதாய தலைவர்கள் பட்டு, முருகன், ஆதிமூலம், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  துணைச் செயலர் மாடசாமி இறைவணக்கம் பாடினார். துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், பொருளாளர் முருகன் ஆகியோர் அறிக்கை வாசித்தனர். 
விழாவில், நற்பணி மன்றத் தலைவர் பிச்சுமணி, மேலகரம் அருணாசலம், வாணியர் பவனம் அறக்கட்டளை  பொருளாளர் வேலு, துணைச் செயலர் குருசாமி,  நிர்வாகக் குழு உறுப்பினர் சுப்பையா,  ஆசிரியர் சின்னஇசக்கி,  வாணியர் சமுதாய துணைச் செயலர் திருமலை, ஓய்வு பெற்ற  தலைமையாசிரியர் மாடசாமி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். 
இதையடுத்து, 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர், மாணவியருக்கு பரிசுகள், ஊக்கத் தொகை ஆகியன வழங்கப்பட்டது. 
குற்றாலம் வாணியர் பவனம் அறக்கட்டளை தலைவர் ரா.வேலு விழா நிறைவுரை ஆற்றினார்.  கல்வி நிதிச் செயலர் நல்லாசிரியர் செண்பகக்குற்றாலம் வரவேற்றார். துணைச் செயலர் கருப்பசாமி நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT