செங்கோட்டை எஸ்.ஆர்.எம் . அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஸ்கைலைட் அறக்கட்டளை சார்பில் மாணவிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு, குற்றாலம் ரோட்டரி சங்கத்தின் பெண்கள் அமைப்புச் செயலர் கல்யாணி சுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஸ்கைலைட் அறக்கட்டளை நிறுவனர் ராதா, பொறுப்பாளர் கே.எஸ். சைலப்பன், செயலர் ஹமீதுசுல்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பின் தலைவி ராமலட்சுமி, மதுரை இந்திய சமூகம் மற்றும் கல்வி மேம்பாட்டு நிறுவனர் மற்றும் திட்ட இயக்குனருமான மருத்துவர் மந்திரமூர்த்தி ஆகியோர் பள்ளி மாணவிகளுக்கு பாதுகாப்பு குறித்து பயிற்சி அளித்தனர்.
இதில், அறக்கட்டளை பொறுப்பாளர்கள் தஷ்னீம்பாத்திமா, முத்தரசன், ரஞ்சித், சபாபதிகுமார், சாந்தி, அரவிந்த் பாலமுருகன், நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் இவாஞ்சலின்டேவிட் வரவேற்றார். நிர்வாகி நவநீதகிருஷ்ணன் நன்றி கூறினார்.