திருநெல்வேலி

சகாய அன்னை ஆலய திருவிழா இன்று தொடக்கம்

30th Aug 2019 10:21 AM

ADVERTISEMENT

பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. ஏ காலனி அருகே ஜவாஹர்நகரில் உள்ள அருள்நிறை சகாய அன்னை தேவாலய திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக. 30) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இத்தேவாலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக.30) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.  திருவிழா நாள்களில் தினமும் மாலை 6 மணிக்கு சிறப்புத் திருப்பலி நடைபெறும். செப். 6 ஆம் தேதி மாலையில் நற்கருணைப் பெருவிழா,  அசனம் ஆகியவை நடைபெறுகிறது. செப். 8 ஆம் தேதி காலை 8 மணிக்கு முதல் நற்கருணைப் பெருவிழா, 14 ஆம் தேதி ரெட்டியார்பட்டி வேளைநகர் தோட்டத்தில் வைத்து தாய்மையின் திருவிழா ஆகியவை நடைபெறும்.
ஏற்பாடுகளை பங்குத்தந்தை ம.அருள்அம்புரோசு, உதவிப் பங்குத்தந்தை கு.ஜேக்கப் அமல ப்ரினீத் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT