கடையநல்லூர் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் எவரெஸ்ட் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றன.
பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற இப்போட்டிகளில் கடையநல்லூர் வட்டாரத்திலுள்ள 500 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். தடகளப் போட்டிகளை கடையநல்லூர் மசூது தைக்கா மேல்நிலைப் பள்ளி நிர்வாகி அசன் மக்தூம் ஆலிம்சாகிபு தலைமையில், கடையநல்லூர் வட்டார விளையாட்டுச் செயலர் முகமதுபுகாரி முன்னிலையில், எவரெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தாளாளர் முகைதீன் அப்துல்காதர் ஒலிம்பிக் தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, தனித்திறன் மேம்பாட்டாளர் அப்துல்காதர் கோப்பைகளை வழங்கிப் பேசினார். இதற்கான ஏற்பாடுகளை மசூது தைக்கா மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் தஸ்லிம், முகம்மது இப்ராஹிம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.