விநாயகர் சதுர்த்தியை ஒட்டி புளியங்குடி பகுதியில் 30 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வது என முடிவு செய்யப்பட்டது.
புளியங்குடி நகர இந்து முன்னணி மற்றும் விநாயகர் சதுர்த்தி கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், இந்து முன்னணி நகரத் தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.
மாவட்டச் செயலர் மாவடிக்கால் சிவா, விநாயகர் சதுர்த்தி விழா ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், புளியங்குடி நகர விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் குழு உறுப்பினர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் 30 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது என முடிவு செய்யப்பட்டது. மேலும், சிலைகளை பிரதிஷ்டை செய்த பின், வழக்கம்போல் சிறப்பு பூஜைகள் செய்து, கருப்பாநதி அணைப்பகுதியில் சிலைகளை விசர்ஜனம் செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், நகர பொதுச்செயலர் கார்த்திக், பொருளாளர் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.