திருநெல்வேலி

நெல்லை வரலாறு, பண்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய அமைப்பு

29th Aug 2019 10:31 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி மாவட்டத்தின் வரலாறு, பண்பாடு, மரபு சின்னங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருநெல்வேலி வரலாறு பண்பாட்டு கள ஆய்வு மையம் என்ற புதிய அமைப்பு புதன்கிழமை தொடங்கப்பட்டது.
பாளையங்கோட்டையில் உள்ள திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவுக்கு காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி தலைமை வகித்தார். கல்லூரிப் பேராசிரியர்கள் தங்கம், பர்னபாஸ் ஜேக்கப், மார்க்ரெட் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளின் தமிழ்த் துறை, வரலாற்றுத் துறை மாணவ, மாணவிகள் சுமார் 200 பேர் விழாவில் பங்கேற்றனர். அமைப்பு குறித்து அதன் ஒருங்கிணைப்பாளர் இ. மாரியப்பன் கூறியது: 
திருநெல்வேலி மாவட்டத்தின் தொன்மை, பண்பாடு, மரபு சின்னங்கள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் சேரும் மாணவர்களுக்கு ஓலைச்சுவடி வாசித்தல், கல்வெட்டு படி எடுத்தல் உள்ளிட்டவை குறித்து விளக்கப்படும். இதுதவிர, முக்கிய மரபு சின்னங்கள் உள்ள பகுதிகளுக்கு களஆய்வுக்கு அழைத்துச் சென்று விளக்கம் அளிக்கப்படும் என்றார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT