இடையன்குடியில் கால்டுவெல் நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
தமிழுக்கு ஒப்பிலக்கணம் தந்த பிரிட்டன் நாட்டு கிறிஸ்தவ பிஷப் கால்டுவெல்லின் நினைவிடம் இடையன்குடியில் உள்ளது. அங்கு நடைபெற்ற அவரது நினைவு தின நிகழ்ச்சிக்கு, கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க மாநில பொதுச்செயலர் தயாநிதி தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் மரிய அந்தோணி, முன்னாள் ஊராட்சித் தலைவர் ஜேகர், மருதூர் மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க மாநிலப் பொருளாளர் ஹமில்டன் வெல்சன் கால்டுவெல் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சேகரகுரு சந்தனகுமார், சேகர பொருளாளர் கிறிஸ்டோபர், ஓய்வுபெற்ற ஆசிரியர் சுவிஷேசமுத்து ஆகியோர் கால்டுவெல் தொண்டு குறித்துப் பேசினர். தலைமை ஆசிரியர் காட்வின், ஆலய நிதி பொருளாளர் செல்வசிங், டாரதி, ஜெபகனி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஓய்வுபெற்ற ஆசிரியர் தர்மராஜ் நன்றி கூறினார்.