திருநெல்வேலி

வீரமாணிக்கபுரம் சிக்னல் அருகே நிரந்தர பேருந்து நிறுத்தம் அமைக்கக் கோரி மனு

28th Aug 2019 10:50 AM

ADVERTISEMENT

திருநெல்வேலி தெற்குப் புறவழிச்சாலையில் வீரமாணிக்கபுரம் சிக்னல் அருகே நிரந்தர பேருந்து நிறுத்தம் அமைக்கக் கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வீரமாணிக்கபுரத்தைச் சேர்ந்த டி.அப்பாத்துரை, கல்யாணி ஆகியோர் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனு: திருநெல்வேலி தெற்குப் புறவழிச் சாலையில் திருநெல்வேலி-அம்பாசமுத்திரம் சாலை இணையும் பகுதியில் சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது. தொலைதூர பேருந்துகளில் வடமாவட்டங்களில் இருந்து வரும் பயணிகள் பாபநாசம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு இங்கிருந்து பேருந்துகளில் ஏறிச் செல்லும் வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் பாபநாசத்தில் இருந்து வருபவர்கள் திருநெல்வேலி சந்திப்பு பகுதிகளுக்குச் செல்ல இந்த சிக்னல் பகுதியில் இறங்கி காத்திருக்கிறார்கள். இப்பகுதியில் நிரந்தர பேருந்து நிறுத்தம் இல்லாததால் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.
ஆகவே, இப் பகுதியில் நிரந்தர பேருந்து நிறுத்தமும், நிழற்குடையும் அமைத்துக் கொடுக்க வேண்டும். திருநெல்வேலி மாநகரப் பகுதியில் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளைச் சீரமைக்கவும், வேகத்தடைகளில் வண்ணம் பூசவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT