சங்கரன்கோவில் வாரியார் சுவாமிகள் மன்றம், குருவாரி அறக்கட்டளை ஆகியன சார்பில், கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவதார தினவிழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி லட்சுமியாபுரம் 5ஆவது தெரு சித்தி விநாயகர் கோயிலில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் வாரியார் சுவாமி படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. கிருபானந்த வாரியார் சுவாமிகள் பெருமை குறித்து புலவர் ச. பாலசுப்பிரமணியன் உரையாற்றினார். விழாவில் முப்பிடாதி,கோட்டியப்பன், கோமதிநாயகம், முருகேசன், பிச்சையா, கணேசன், கோமதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.