பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூர் ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோயிலில் பவித்ரோத்ஸவ விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
அன்று காலை புண்ணியாகவாசனம், சிறப்பு திருமஞ்சனம், பவித்ரோத்ஸவ ஹோமம், பூர்ணாஹுதி, சுவாமி மற்றும் கருடாழ்வாருக்கு பவித்ரமாலை சமர்ப்பித்தல், சிறப்பு திருவாராதனம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு சுவாமி திருவீதி உலா, சுவாமிக்கு பவித்திர மாலை சமர்ப்பணம் செய்யப்பட்டது. திங்கள்கிழமை காலை சிறப்பு திருமஞ்சனம், பவித்திரமாலை பிரதிஷ்டை, நாம சங்கீர்த்தனம், மாலையில் சுவாமி சயன தரிசனம், சிறப்பு ஹோமம், வேதபாராயணம், நாமசங்கீர்த்தனம் ஆகியன நடைபெற்றன.